பக்கம்:மாவிளக்கு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதன”ஆடு # 47

ஒரு நாள் உச்சி வேளையில் கிழவன் வழக்கம்போல ஆடுகளை வேப்பமரத்து நிழலுக்கு ஒட்டிக் கொண்டு வந்து கிழவியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக் தான். கிழவி கலயத்தைத் தலையில் வைத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். களிமட்டும் வந்தது ; துவையல் இல்லை. கிழவன் முகம் சுருங்கியது.

அவனுக்குப் பச்சைப் புளியங்காய்த் துவையல் ரொம்பப் பிடிக்கும். புளியங் காயையும் பச்சை மிளகாயையும் வைத்து இரண்டு உப்புக்கல்லும் போட்டுத் துவையல் அரைத்து விட்டால் மூன்று காளைக்கு முன்னே கிண்டிய களியாக இருந்தாலும் கிழவனுக்கு அமுதமாகிவிடும்.

ஆஞல், காள்தோறும் பச்சைப் புளியங்காய் கிடைக்கிறதா ? புளியங்காய் கிடைப்பதாக இருந்தாலும் கிழவிக்கு அதைத் தேடிக் கொண்டு வர நேரம் கிடைக்க வேண்டுமே ? - -

புளியங்காய்த் துவையல் இல்லாதபோது கிழவன் முணுமுணுத்துக் கொண்டே கூழைக் குடிப்பான். வேப்பமரத்து நிழலிலே கொஞ்சம் வாக்கு வாதமும் நடைபெறும். அதை ஆடுகள்தான் அசை போட்டுக் கொண்டே கேட்டிருக்கும்.

இந்த நாளிலும் அவ்வாறு வாக்குப் போர் கடந்தது. அதன் முடிவிலே கிழவன் அலுத்துப் போய் விட்டான். இந்தச் சினை ஆடு குட்டிப்போடும் வரை யிலுக்தான் என்னலே கஷ்டப்பட முடியும். அதற்கு மேலே இந்த ஆடுகளோடு திரிய என்னலாகாது. இப்பவே உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/149&oldid=616292" இலிருந்து மீள்விக்கப்பட்டது