பக்கம்:மாவிளக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 13

கிறவர் யாரும் காட்டுப்பாளையத்தில் கிடையாது. அவர் வைத்ததுதான் சட்டம். அதை யாரும் மீறி நடக்க மாட்டார்கள். அவ்வளவு செல்வாக்கியிருந்தாலும் அவர் கொடுங்கோல் கடத்தவில்லை. எவளுவது தம்மை மீறப் பார்க்கிருனென்ருல் விடமாட்டார். மற்றபடி எல்லோரி டமும் அனுதாபத்தோடுதான் கடப்பார். அவருக்குப் பணிந்துகொண்டு போகிறவர்களுக்கு கல்ல சலுகைகளும் கிடைக்கும். நீங்கள்தான் ராஜா " என்று சொல்லி விட்டால் போதும் அவருக்கு என்ன உதவியும் செய்ய முன் வருவார். அதிகாரத்திலே அத்தனை ஆசை யுடையவர்.

அவர் வீட்டிலே இரவும் பகலும் பத்துப் பதினேந்து பேர் காத்துக் கிடப்பார்கள். எதிரிகளுடைய பயமில்லே யென்ருலும் தோரணைக்காக ஆட்கள் இருப்பார்கள்.

ஆறு வருஷங்களுக்கு முன்னே பக்கத்துார் வாசி களோடு பூமி விஷயமாக ஒரு கலவரம் ஏற்பட்டது. அதிலே வேலுச்சாமிக் கவுண்டர் முழு வெற்றியடைந்து விட்டார். கியாயம் அவர் பக்கத்திலே இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், அவருடைய பணம் காரியத்தைச் சாதித்தது. அவரிடம் வாலாட்ட நினைத்த எல்லோரையும் அந்தக் கலவரத்தை யொட்டிய வழக்கிலே சிக்க வைத்து ஜெயிலுக்கு ஒட்டிவிட்டார். அதற்குப் பிறகு அவர் கிழித்த கோட்டைத் தாண்டிப் போகிறவர்கள் யாருமே இருக்கவில்லை.

முத்துசாமி காட்டுப்பாளையத்தில் ஒரு சாதாரணக் கூலிக்காரன். அவன் கல்லவன்தான். அவனிடத்திலே யாரும் எவ்விதக் குறைபாடும் காண முடியாது. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/15&oldid=616016" இலிருந்து மீள்விக்கப்பட்டது