பக்கம்:மாவிளக்கு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதன ஆடு 149.

" இருபத்தஞ்சு வந்தாலும் போதும்; எனக்கு இனிமுடியாது. இந்த இருமல் வந்தால் கடக்கவே முடியறதில்லை. நெஞ்செல்லாம் ஒரே வலி.” -

கிழவி மிளகு கொண்டு வந்தாள். கிழவன் அதை வாயில் போட்டு மென்று கொண்டே யோசனையி லிருந்தான். “குட்டியாட்டை காளைக்கு விற்றுவிடலாம். ரண்டு மாசத்திலே சினே ஆட்டையும் மகள் கையிலே பிடித்துக் கொடுத்து விடலாம். அப்புறம் என்பாடு தீர்ந்துபோகும்.’-இப்படி நினைத்துக் கொண்டே அவன் கண்ணயர்ந்துவிட்டான். கிழவியும் உறங்கிவிட்டாள். ஆடுகளும் குட்டியும் வாசலிலே படுத்திருந்தன.

விடியற்காலேயிலே வாசலுக்குச் சாணம் தெளிக்க எழுந்திருந்த கிழவி சினை ஆட்டைக் காணுமல் சத்தம் போட்டாள். - . - -س

'கான்தானே முளையிலே நல்லாக் கட்டிவிட்டு வந்தேன்; இப்போ கயிற்ருேடே அதைக் காணுேமே?”

கிழவன் அவசரமாக எழுந்தான். சும்மா சத்தம் போடாதே. கயிற்ருேடே அவிழ்த்துக்கொண்டு எங் காவது போயிருக்கும்” என்று சமாதானம் கூறிவிட்டு ஆட்டைத் தேடி அவன் கடந்தான். -

கொஞ்ச தூரம் அவன் காலே இழுத்துக்கொண்டு. போனன். எதிரே வள்ளியாத்தாள் அலங்கோலமாக வந்து கின்ருள். -

" அப்பா, உங்கள் மருமகன் பண்ணின வேலையைப் பார்த்தீங்களா? சேராதவர்களோடு சேர்ந்து ராத்திரிக் கள்ளச் சாராயம் காய்ச்சிப் போலீசிலே அகப்பட்டுக் கிட்டாங்கோ” என்று கூறிவிட்டு அவள் புலம்பினள்.

J 0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/151&oldid=616296" இலிருந்து மீள்விக்கப்பட்டது