பக்கம்:மாவிளக்கு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 மா விளக்கு

கிழவனுக்குப் பகீரென்றது. இப்படி எத்தனை காளா நடக்குது?’ என்று குழறிக் குழறிக் கேட்டான்.

" எப்பவும் கிடையாது. ராத்திரித்தான் முதல் முதல்லே இப்படிச் சேர்ந்திருக்கிரு.ர். குடிவ்ெறியிலே யார் பட்டியிலோ ஆடு ஒன்றைத் திருடி வந்து எல்லோ ருங்கூடி வறுத்துத் தின்றிருக்கிருர்கள். இப்போ அகப் பட்டுக்கொண்டு மானம் போச்சே என்று கதறுகிருர்கள். வெளியே தலை நீட்ட வெக்கமாயிருக்குதாம்.’-இப்படிச் சொல்லிவிட்டு வள்ளியாத்தாள் தந்தைமேல் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

'அழவேண்டாம், வள்ளியாத்தா. இனிமேல் அவங் களுக்கு நல்ல புத்தி வந்துவிடும்.”

" சினே ஆடாம் அப்பா. அதை அறுத்தபோது வயிற்றிலே ரண்டு குட்டி இருந்ததாம். அதைப் பார்த் ததும் உங்கள் மருமகனுக்கு சகிக்கவே முடியலேயாம். அப்பவே நல்ல புத்தி வந்துவிட்டது. ஆனல் போலிசிலே பிடித்து விட்டார்கள். பத்துப் பதினைந்து அபராதம் போடுவார்களாம். அதுக்கு கான் என்ன செய்யட்டும் ?? “ வள்ளியாத்தா, கான் உனக்குப் பணம் கொடுக் கிறேன். விசனப்படாதே. நீ இப்பவே உங்கள் ஊருக்குப் போய் அவருக்கு ஆறுதல் சொல்லு."

“ அம்மாளைப் பார்த்துவிட்டுப் போகிறேன்.” " வேண்டாம். அம்மாளுக்கு இந்த விசயம் தெரியப் படாது. நீ இப்பவே துாரன்பாளையம் போ.”

வள்ளியர்த்தாள் வந்த வழியே திரும்பினள். குட்டி ஆட்டைச் சின்னப்பன் இருபத்தஞ்சுக்குக் கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/152&oldid=616299" இலிருந்து மீள்விக்கப்பட்டது