பக்கம்:மாவிளக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 4 மா விளக்கு

கல்லவனுக மட்டும் இருந்தால் கிராமத்திலே போதுமா ? கையிளேத்தவனுக இருக்கும் போது செல்வருக்குப் பணிந்து கடந்து கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பணிந்து கடக்கிற சுபாவம் மட்டும் அவனிடம் கிடையாது. ' கஸ்டப்பட்டு வேலை செய்தால் கூலி கிடைக்கிறது. ஒருத்தனுடைய தயவு எதுக்கு வேனும் ' என்பது அவனுடைய எண்ணம் யாராவது உயர்வுத் தோரணையோடு பேசில்ை அவனல் பொறுக்க முடியாது. ஒரு நாள் அவன் வேலுச்சாமிக் கவுண்டருக்கு முன்னலே ஏதோ துடுக்காகப் பேசி விட்டான். விஷயம் ஒன்றும் பெரியதில்லை. சாதாரண மாகத் தினமும் கிராமத்திலே பேசப்படுகிற விஷயங் தான். இருந்தாலும் கவுண்டருக்கு முன்னலே அப்படிப் பேச முடியுமா ? அதை மனதிலேயே வைத்துக் கொண் டிருந்து வேலுச்சாமிக் கவுண்டர் அவனையும் பக்கத்துார் கலவர வழக்கிலே எதிரியாக சம்பந்தப்படுத்திவிட்டார். தமக்குப் பணிந்து நடக்கத் தெரியாதவனுக்குக் கொஞ்சம் பாடம் கற்பிக்கவேண்டும் என்பதுதான் அவருக்கு எண்ணம். ஆனால், முத்துசாமிக்கு ஆறு வருஷம் ஜெயில் கிடைக்குமென்று அவர் எதிர்பார்க்க வில்லே. நீதிமன்றத்திலே அவன் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அவனுக்குப் பாதகமாய் கின்றன.

"பணந்தானே ஜெயித்தது : நீதியா நடந்தது ? அன்றைக்கு இந்த வேலுச்சாமிக்கவுண்டன் தன் பணத்தி லைல்லவா என்னேச் சிக்க வைத்துவிட்டான். இப்போ அவன் வரட்டும். அவன் பணம் என்ன செய்யும் என் பதை நான் பார்க்கிறேன்” என்று கருவிக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/16&oldid=616018" இலிருந்து மீள்விக்கப்பட்டது