பக்கம்:மாவிளக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 15

முத்துசாமி கோயிலுக்கு முன்னல் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் கறுப்பண்ணசாமி யின் தலே இருந்தது. அந்தத் தலையையே வேலுச்சாமிக் கவுண்டரின் தலையில் போட்டு உடைக்க வேண்டும் என்பது அவனுடைய கோக்கம்.

வேலுச்சாமிக் கவுண்டர் காலேயில் ஏறக்குறைய ஐந்து மணிக்குத்தான் கோயிலுக்கு வருவார். அதுவரை கிதானமாக ஒரிடத்தில் அமர்ந்திருக்க எவ்வளவோ அவகாசம் இருந்தது. ஆல்ை, முத்துசாமி உட்காரக் கூட நினைக்கவில்லை. அவன் உள்ளத்திலே ஆத்திரம் பொங்கிக் கொண்டிருந்தது. அதனால் அவன் வழிமேல் விழிவைத்து கின்றிருந்தான்.

ஆயிற்று : மணி ஐந்திருக்கும். கார்த்திகை மாச மாதலால் நல்ல குளிர். பனியும் பெய்தது. இருட்டும் குறையவில்லை. அந்த நேரத்தில் சற்று தூரத்தில் வரு கின்றவரைக்கூடக் கண்டுகொள்ள முடியாது. அப்படி இருண்டிருப்பதும் முத்துசாமிக்கு ஒரு வகையில் சாதக மாக இருந்தது.

அவன் வேலுச்சாமிக் கவுண்டர் வழக்கமாக வரும் வழியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். "அதோ, வந்துவிட்டானே : அந்தச் சிவப்புச் சால்வை யைப் போர்த்துக்கொண்டு வருவதை இன்னும் அவன் விடவில்லையா ? வரட்டும் வரட்டும்-அந்தச் சிவப்புச் சால்வைக்கு இன்னும் நல்ல சிவப்புச் சாயம் கொடுக் கிறேன்” என்று அவன் கொதித்துக்கொண்டு எச்ச ரிக்கையாக கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/17&oldid=616020" இலிருந்து மீள்விக்கப்பட்டது