பக்கம்:மாவிளக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 1 7

யையும் ஆறு வருஷங்களுக்குப் பிறகு அன்று பார்க்கப் போகிருன். அதை எதிர்பார்த்து அவனுள்ளத்திலே எழுந்த இன்ப உணர்ச்சியைவிடத் தான் கினைத்த காரி யத்தைத் தனது திட்டப்படி அன்றே முடித்து விட்ட தற்காகப் பூரிப்பு அதிகமாக இருந்தது. ' கறுப்பண்ண சாமி இந்தக் காரியத்திற்காக எனக்கு உதவினரே அதுவே போதும்; அவர் தலே கைக்கு அடக்கமாக இருந்தது” என்று அவன் நினைத்து உள்ளுக்குள்ளே களிப்படைந்தான். கொலே செய்தது வெளியானல் என்ன செய்வது என்று அவன் சிந்திக்கவில்லை. வேலாங் காட்டிற்கு அவன் சென்றதை யாரும் பார்த்திருக்க முடியாது. மேலும் அவன் கறுப்பண்ணசாமியிடத்திலே அளவு கடந்த பக்தியுடையவன் என்றுதான் ஊரிலே எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்கச் சிலையை உடைத்த குற்றத்தையோ அந்தச் சிலேயின் தலையைக் கொண்டே கவுண்டரைத் தாக்கிய குற்றத்தையோ யாரும் இவன்மேல் சுமத்தமாட்டார்கள். அப்படி ஒரு எண்ணமே யாருக்கும் உதயமாகாது. கறுப்பண்ணசாமி யிடத்திலே அவனுக்கிருந்த பக்தியைப்பற்றி ஊரிலே அத்தனை மதிப்பு இருந்தது. -

முத்துசாமியின் மனைவி சின்னம்மாள் வாசலுக்குச் சாணம் தெளித்துக் கொண்டிருந்தாள். அவள் தன் கணவனேக் கண்டதும் வேலேயை விட்டுவிட்டு ஒரே முக மலர்ச்சியோடு அருகில் வந்தாள்.

  • காலே ரயிலிலா வந்திங்க ?’ என்று என்ன கேட்ப தென்று தெரியாமல் கேட்டாள். அவன் பிரிந்திருந்த வருஷங்களெல்லாம் அவளுக்கு ஒரு இரவு போல மறைந்துவிட்டன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/19&oldid=616024" இலிருந்து மீள்விக்கப்பட்டது