பக்கம்:மாவிளக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி i 9

கறுப்பண்ணசாமிக்குப் பெரிய கோயில் கட்டி வைக்கிற தாக வேண்டுதலையெல்லாம் பண்ணினர். ஆனால், ஒன்றும் சரியாகலே. கடைசி வரையிலும் படுக்கை யாகவேதான் கிடந்தார்.”

' என்னது? அவரு இப்போ எங்கே ’ என்று திடுக்கிட்டுக் கேட்டான் முத்துசாமி.

' அவர் செத்துப்போய் நாலு மாசத்துக்கு மேலா வுது. அவர் சாகிறபோது சொல்லிட்டுச் செத்ததுபோல உங்க அப்பாதான் இப்போ தினமும் காலேயிலே கறுப் பண்ணசாமியைக் கும்பிடப் போருங்க. நீங்க சுகமாகத் திரும்பி வர வேணும்னு பண்ணைக்காரர் தினமும் கும்பிடச் சொன்னங்களாம்.”

'அய்யோ கறுப்பண்ணு, இந்த ஆத்திரக்காரனேக் காப்பாத்துவாயா ? என்னைக் காப்பாத்த வேண்டாம் ; என் தகப்பனரையாவது காப்பாத்து, காப்பாத்து ” என்று அலறிக்கொண்டே முத்துசாமி வேலாங்காட்டை நோக்கி வெறி பிடித்தவன்போல ஒடினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/21&oldid=616028" இலிருந்து மீள்விக்கப்பட்டது