பக்கம்:மாவிளக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெலிபோன் மணி 21

அதையெல்லாம் கான் எங்கடா பார்த்தேன் ? அவள் தான் யாரையோ கேட்டுத் தெரிந்து கொண் டிருக்கிருள். அதுதான் அவளுக்கு இத்தனை பயம். தாயார் இறந்தபிறகு முதல் தடவையாக மறுபடியும் இன்றைக்கு அதே கட்சத்திரம், வருகிறதாம். அதேைல இன்று ராத்திரி பன்னிரண்டு மணிக்குத் தாயாருடைய ஆவி எங்கள் வீட்டிலே வந்து உலாவுமாம். எல்லாம் ஒரே குருட்டு நம்பிக்கை என்று சொல்லிவிட்டு அவன் கிம்மதியிழந்தவன் போல எழுந்து நடமாடிக் கொண்டே சன்னல் அருகே போனன்.

கமலகாதா, அது குருட்டு கம்பிக்கையோ இல்லையோ, மைதிலிக்கு இந்தச் சமயத்திலே அவைசிய மான பயமோ அதிர்ச்சியோ ஏற்படக்கூடாது. அதுதான் முக்கியம்.' -

  • அதை கினேச்சுத்தான் என் கொள்கையைக்கூட விட்டுக் கொடுத்துவிட்டு வீட்டை இழுத்துப் பூட்டி விட்டு வந்திருக்கிறேனே, இன்னும் என்ன செய்ய வேணும் ? என்று கமலநாதன் சற்று கடுகடுத்த குரலில் பேசின்ை. -

சோமசுந்தரம் தன் நண்பனுடைய மனநிலையை அறிந்து பேச்சை மாற்ற முயன்ருன்.

ஏண்டா, சினிமாவுக்குப் போகலாமா ? இப்போ புறப்பட்டால் இரண்டாவது காட்சிக்கு நேரம் கணக் காக இருக்கும். தமிழ்ப் படம் முடிவதற்கும் மணி இரண்டாகிவிடும்.'

கான் தயார்-ஆல்ை, மைதிலி வரமாட்டாளே ? இப்போ பார்த்தாயா ? இங்கே பேசிக்கொண்டிருக்கக்

>。

نه تنش

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/23&oldid=616032" இலிருந்து மீள்விக்கப்பட்டது