பக்கம்:மாவிளக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மா விளக்கு

கோபம் இருந்தாலும் நான்தான் இப்பொழுது சிந்தா திரிப்பேட்டையை விட்டுத் தியாகராயநகர் வந்து விட்டேனே ?....மாமியார் இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும் சிந்தாதிரிப்பேட்டை வீட்டுக்குத்தானே போவார்கள் ? இங்கே எனக்கென்ன பயம் ?...... இருக் தாலும் மாமியார் என்றே யாரும் இருக்கப்படாது.... ஆனால், அது எப்படி முடியும்?' என்றிவ்வாறெல்லாம் சிந்தனே அலைகள் அவள் உள்ளத்திலே மோதிக்கொண் டிருந்தன. அவள் படுத்திருந்த அறையிலே மின்சார விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.

மைதிலி கண்களே முடியிருந்ததால் உறங்குகிரு ளென்று கினேத்து அவள் உறக்கத்தைக் கலைக்கக்கூடா தென்று கமலநாதன் சப்தம் செய்யாமல் தனது கட்டிலில் படுத்தான். இருந்தாலும் மைதிலி மிகுந்த எச்சரிக்கை யோடும், உணர்ச்சி வசப்பட்டுமிருந்ததால், ம்...... யாரது ?’ என்று கூறிக்கொண்டே தி டு க் கி ட் டெழுந்தாள்.

நான்தான், மைதிலி. நீ படுத்துத் தூங்கு என்ருன் கமலநாதன். -

மைதிலி மெதுவாகப் படுக்கையில் சாய்ந்தாள். * காளைக்குக் காலேயிலே கந்தகோட்டத்திலே விசேஷமாம். நாம் போகலாமா ? என்று கேட்டான் கமலநாதன். -

நாளைக்கா ? என்று அடுத்த நாளேப்பற்றி ஏதோ சந்தேகத்தோடு மைதிலி பதில் கேள்வி கேட்டாள்.

ஆமாம், காலேயிலே எழுந்ததும் குளித்துவிட்டு நேராகக் கந்தகோட்டத்திற்குப் போகலாம். சுவாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/26&oldid=616038" இலிருந்து மீள்விக்கப்பட்டது