பக்கம்:மாவிளக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மா விளக்கு

வாருக அவனுடைய சிந்தனை பல திசைகளில் ஒடிக் கொண்டிருக்கும்போது எப்படியோ தூக்கம் அவனேச் குழ்ந்துகொண்டது.

அவன் இரண்டு மணி நேரம்கூடத் தூங்கியிருக்க மாட்டான். யாரோ வீரிட்டலறுவதுபோல் சப்தம் கேட்டு அவன் திடுக்கிட்டெழுந்தான்.

முதலில் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லே. மங்கிய மின்சார விளக்கொளியில் மைதிலியின் முகம் பயங்கரமாகக் காட்சியளித்ததைக் கவனித்தபோதுதான் அவனுக்கு கிலேமை திடீரென்று தெளிவாயிற்று.

மைதிலி டெலிபோன் கருவியைக் காதில் வைத்துக் கொண்டு அதில் யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண் டிருந்தாள். அவள் கண்களிலே பயம் தாண்டவ மாடியது. கைகள் நடுங்கின. ஐயோ, நான்தான் மாமி’ என்ற வார்த்தைகள் அவள் நெஞ்சைப் பிளந்துகொண்டு பெருமூச்சோடு வெளிப்பட்டன.

  • மைதிலீ, என்ன அது ? என்று கேட்டுக்கொண்டே கமலநாதன் தடாலென்றெழுந்து அவளிடம் பாய்ந்து சென்ருன்.

மைதிலிக்குப் பதில் சொல்ல கா எழவில்லை. அவள் உடம்பெல்லாம் குப்பென்று வேர்த்து ஒழுகிக்கொண் டிருந்தது.

கமலநாதன் டெலிபோன் ரிசீவரை அவள் கையி லிருந்து பிடுங்கித் தன் காதில் வைத்துக் கேட்டான்.

ஆமாம், சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள அவன் வீட்டிலிருந்துதான் பேச்சுக் குரல் வந்தது. கலவரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/28&oldid=616042" இலிருந்து மீள்விக்கப்பட்டது