பக்கம்:மாவிளக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெலிபோன் மணி 27

சத்தத்திற்கும் பேச்சுக்குமிடையே, யாரடா டெலி போன எடுத்தது : பேசாமல் அதை வையடா’ என்ற அதிகாரக் குரலும் கேட்டது.

பேயில் நம்பிக்கை சிறிதுமில்லாத கமலநாதனைக் கூட இந்தக் குரல் ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. ஆல்ை, அவன் எப்படியோ சமாளித்துக்கொண்டு சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலி போன் செய்யத் தொடங்கின்ை.

  • நான்தான் கமலநாதன். தியாகராயநகரிலிருந்து பேசுகிறேன். சிந்தாதிரிப்பேட்டை கணபதி முதலியார் தெருவில் பத்தாம் நம்பர் பங்களா என்னுடையது. அங்கே ஏதோ கலவரமாக இருக்கிறது......... ஆமாம் சார்-அங்கே சொந்தக்காரர் யாரும் இல்லை. இன்றைக்கு மாலையில்தான் நானும் என் மனைவியும் பங்களாவை இழுத்துப் பூட்டிவிட்டு வந்தோம். அதற்குள்ள்ே கல வரம் கடக்கிறதென்று டெலிபோனில் தெரிந்தது. உடனே போலீசை அனுப்புங்கள்...... சரி சார்-நானும் உடனே வருகிறேன்...... கம்ஸ்காரம்-ரொம்ப கன்றி சார் என்று அவன் வேகமாகப் பேசினன்.

மைதிலி அப்படியே பிரமை பிடித்தவள்போல உட்கார்ந்திருந்தாள்.

  • மைதிலி, பயப்படாதே. அதெல்லாம் ஒன்று மில்லை என்று கமலநாதன் தைரியம் சொல்லிக்கொண் டிருக்கும்போதே அவனுடைய பேச்சுக் குரல் கேட்டு சோமசுந்தரம் தூக்கம் கலந்து அங்கு வந்து சேர்ந்தான்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/29&oldid=616044" இலிருந்து மீள்விக்கப்பட்டது