பக்கம்:மாவிளக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மா விளக்கு

சோமு, இவளேக் கவனித்துக்கொள். நான் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று படபடத்த குரலில் பேசின்ை கமலநாதன்.

' என்னடா, எதுக்கு இத்தனை படபடப்பு ? கேட்டை நட்சத்திரம் பார்க்கப் போகிருயா ? என்று அலட்சியமாக சோமசுந்தரம் கேட்டான்.

இல்லேயடா, என்னமோ விஷயம் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்திலே எல்லாம் தெரிந்து போகும்’ என்று சொல்லிக்கொண்டே கமலநாதன் ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கினன். -

மைதிலிக்கு அப்பொழுதுதான் வாய் பேச வந்தது. * நீங்கள் போகவே கூடாது-நான் விடவே மாட்டேன். கேட்டை ரொம்பப் பொல்லாதது என்று அவள் கதறினுள். என்ன சமாதானம் கூறியும் கமலநாதன் புறப்படுவதற்கு அவள் சம்மதிக்கவில்லே. கடைசியில் மூவரும் சேர்ந்து புறப்படுவதென்று ஒருவாறு தீர்மானம் செய்தார்கள்.

சோமசுந்தரம் தனது பங்களாக் கதவுகளை இழுத்துப் பூட்டுவதில் முனைந்தான். கமலநாதன் காரை வாசலிலே கொண்டுவந்து நிறுத்தின்ை.

பத்து நிமிஷத்தில் அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். அடுத்த பதினேந்து நிமிஷங்களிலே சிந்தாதிரிப் பேட்டை வந்துவிட்டார்கள். -

கர்ப்பிணியாக இருக்கும் மைதிலியின் கிலேயைக் கூடக் கவனியாமல் அத்தனை வேகமாகக் காரை ஒட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/30&oldid=616046" இலிருந்து மீள்விக்கப்பட்டது