பக்கம்:மாவிளக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெலிபோன் மணி 39 .

தற்காகக் கமலநாதனே சோமசுந்தரம் மனதிற்குள்ளே கொந்துகொண்டிருந்தான்.

கணபதி முதலியார் தெருவிலே பத்தாவது பங்களா வின் வெளிவாயிலில் கின்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அவர்களே வரவேற்ருர்.

மிஸ்டர் கமலகாதன், உங்கள் சமயோசித புத்தியை நான் பாராட்டுகிறேன். கொஞ்சம் தாமதம் செய்திருந்தால் காரியம் மிஞ்சிப் போயிருக்கும் என்று இன்ஸ்பெக்டர் கல்வரவு கூறினர்.

காரில் வந்த மூவருக்கும் விஷயம் உடனே விளங்க வில்லை. அவர்கள் பங்களாவுக்குள் காலெடுத்து வைத் தார்கள். கையில் விலங்கு பூட்டப்பட்டு ஐந்து பேர் அங்கே கின்றுகொண்டிருந்தார்கள். போதை வெறி அவர்கள் கண்களிலே இன்னும் மறையவில்லை. ஆறேழு போலீஸ்காரர்கள் அவர்களைக் காவல் புரிந்தார்கள்.

'நீங்கள் வீட்டிலில்லாத விஷயம் எப்படியோ இவர் களுக்குத் தெரிந்திருக்கிறது என்று இன்ஸ்பெக்டர், விளக்கம் கூறத் தொடங்கினர். *:. . -

அவர் தாம் கைது செய்த ஆட்களுடனேபோலிஸ் ஸ்டேஷனுக்குப் போன பிறகுதான் கமலநாதனும் சோமசுந்தரமும் கேட்டை கட்சத்திரத்தைப்பற்றிப் பேசத் தொடங்கினர்கள்.

அந்த நட்சத்திரம் கல்லதே பண்ணியிருக்கிறது’ என்ருன் சோமசுந்தரம்.

போடா, அதெல்லாம் சுத்த முட்டாள்தனம்என்னவோ தற்செயலாகத் திருட்டு விஷயம் நமக்குத் தெரிந்துவிட்டது-அவ்வளவுதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/31&oldid=616048" இலிருந்து மீள்விக்கப்பட்டது