பக்கம்:மாவிளக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல் 33

கங்கப்பன் அலைகளோடு போராடிக் கொண்டு தனது கட்டுமரத்தைக் காளியினருகே செலுத்த முயல் கிருன். ஐந்து நாட்களாக அவன் அரைப்பட்டினி. இருந்தாலும் அவன் தனது முயற்சியில் தளரவில்லே.

காளி அவனைப் பார்த்துவிட்டான். பார்த்ததும் அவன் உள்ளத்திலே ஒரு பெரும் புயல் கிளம்பியது. வான வெளியிலே வீசிக் கொண்டிருந்த புயலைக் காட்டிலும் பயங்கரமான புயல் அது. கங்கப்பனுடைய உயிரைக் குடித்துவிட வேண்டுமென்ற கோடவேசக் கொடுங்கனல் அது. தனது ஆத்திரத்தையெல்லாம் தீர்த்துக்கொள்ள அப்பொழுதாவது சமயம் கிடைத்ததே யென்று அவன் சந்தோஷப்பட்டான். சாவதற்கு முன்னலே வஞ்சம் தீர்த்துக் கொள்ள வழியேற் பட்டதைப் பற்றி அவனுக்கு அத்தனே திருப்தி. -

கொம்மாளமிட்டுப் பேய்ச் சிரிப்புச் சிரிக்கும் அலை களினிடையே கங்கப்பனுடைய துடுப்பு வலிமையோடு பாய்கிறது. காளியின் கட்டுமரத்தை எப்படியாவது அடைய வேண்டுமென்ற உறுதி அவனுக்கு என்று மில்லாத வலிமையைத் தந்தது. அவன் முழுக் கவனமும் கட்டுமரத்தைச் செலுத்துவதிலேயே இருந்தது.

கங்கப்பன் வெகு சமீபத்தில் வந்துவிட்டான். காளிக்கு அதற்குமேலே பொறுத்திருக்க முடியவில்லை. இன்னும் எதற்குப் பொறுக்கவேண்டும் அரிவாளே வீசுவதற்கு அதுதான் சரியான தாரம். இப்பொழுது வீசினல் அரிவாள் கங்கப்பன் தலையை நிச்சயமாகத் துண்டித்துக்கொண்டு போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/35&oldid=616057" இலிருந்து மீள்விக்கப்பட்டது