பக்கம்:மாவிளக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல் ჰჭ 7

காளி மெளனமாக ரொட்டியை வாங்கி வாயில் போட்டுமென்று கொண்டிருந்தான்.

இந்த வருஷம் கோலா மீன் வேட்டை இப்படி ஆகும்னு யாரும் கனவில்கூட கினேச்சிருக்க மாட் டார்கள்’ என்று மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான் கங்கபடlன.

காளி ஒன்றும் பேசவில்லை.

எனக்குத் தெரிஞ்ச வரையிலும் கோலா மீன் வேட்டைக்கு இடைஞ்சலாக இந்த மாசத்திலே புயல் எப்பவும் வந்ததே இல்லை. கங்கப்பன்தான் மறுபடியும் பேசுகிருன். காளி ஒரே மெளனம்.

வெளியிலே புயல் ஓயவில்லே. காளியின் மனத் திலும் இன்னும் புயல் ஓயவில்லே.

காளி கங்கப்பனவிட இரண்டு வயது மூத்தவன். அதனுல் கங்கப்பன் அவனே அண்ணுவென்று கூப்பிடு வான். இருவரும் சென்ற வாரம்வரையிலும் உயிருக்குயி ரான அண்ணன் தம்பிகள்போலத்தான் இருந்தார்கள். ஒரே கட்டுமரத்தை வைத்துக்கொண்டு மீன் பிடித்து வாழ்க்கை கடத்தி வந்தார்கள். ஆனால், இந்த வாரத் திலே கிலேமை முற்றிலும் மாறிவிட்டது. காளி தனி யாகப் பிரிந்துவிட்டான். பிரிந்து போனதோடு அவன் கோபம் தீர்ந்துவிடவில்லே. கங்கப்பனைக் கொன்று திர்த்துவிட வேண்டுமென்றே கறுவிக்கொண்டிருந் தான். இப்படி அவன் நினைப்பதைக் கங்கப்பன் அறியான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/39&oldid=616065" இலிருந்து மீள்விக்கப்பட்டது