பக்கம்:மாவிளக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மா விளக்கு

கான ? நான்தான் இப்பவே அரை உசிராக் கிடக்கிறேன். இப்படியே கடலுக்குள்ளே போய்ட் டால் எனக்கு கிம்மதியாப் போகும்.”

அண்ணே, நீ இப்படிச் சொல்லப்படாது. கடல்லே போனல் ரண்டு பேருமாப் போய்டுவோம். பிழைச்சுக் குப்பத்துக்குப் போரதுன்ன உன்னே விட்டுட்டு நான் போகமாட்டேன். உன்னே விட்டுட்டுப் போகவா கன் இத்தனைக் கஷ்டப்பட்டு உன்னைத் தேடிக்கினு வந்தேன்? உனக்குக் கொடுக்கவேணும்னு அந்த ரொட்டித் துண்டைக்கூட் நான் ரண்டு நாளா வாயிலே போடலையே ?

காளி பதில் பேசவில்லை. அவன் உள்ளத்திலே மறுபடியும் போராட்டம். கங்கப்பனுடைய செயலும் பேச்சும் காளியின் மனத்தில் தடால்தடாலென்று மோதிக் கொண்டிருந்தன. அலேகள் கட்டுமரத்தை மோதின. கங்கப்பனுடைய செயலேயோ பேச்சையோ காளி எதிர்பார்க்கவே இல்லை. .

எங்கிருந்தோ ஒரு கட்டுமரம் ஆளில்லாமல் அலைகளிலே ஊசலாடிக்கொண்டு வந்தது. ஆலோசனையி லிருந்த காளி அதைக் கவனித்தான்.

அதோ, அப்படித்தான் இந்தக் கட்டுமர்மும் ஆளில்லாமல் இன்றைக்கோ காளேக்கோ போகப் போறது என்ருன் காளி. உள்ளக் குமுறல் தலை துக்குகிறது. -

கடல் அடிச்சுக்கொண்டு போனல் ரண்டு பேரையும் சேர்த்துத்தானே அடிச்சுக்கொண்டு போகும்? இத்தனே காளாகப் பிரியாதவங்க சாகப் போறபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/42&oldid=616071" இலிருந்து மீள்விக்கப்பட்டது