பக்கம்:மாவிளக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மா விளக்கு

கேப்டன் பம்கின்ஸ் கூறியதை எல்லோரும் ஒரு முகமாக அறுவறுப்போடு காதில் வாங்கிக்கொண்டார்க ளென்ருலும் அந்த விஷயம் ஒரு பெரிய கலகலப்பை உண்டுபண்ணிவிட்டது. பத்திரிகைகளுக்குப் புதுமாதிரி யான நல்ல விருந்தாயிற்று. கொலே, கொள்ளே, சோரம் என்று இப்படியே நாள்தோறும் ஒரேமாதிரி பத்திரிகைச் செய்தியாகிய உணவை உண்டுண்டு அலுத்துப்போனவர் களுக்கு இந்தப் புதிய விருந்து எப்பொழுதாவது கிடைக்கும் வடுமாங்காய் ஊறுகாய்போலப் பெரிதும் திருப்தியளித்தது. அதைப்பற்றியே அமெரிக்கா முழு வதும் பேச்சாகிவிட்டது. கேப்டன் பம்கின்ளின் மூளையின் கிலேமையைப்பற்றிச் சங்தேகமில்லாமல் எல்லோரும் ஏகமனதாக அபிப்பிராயம் கூறிவிட்டபடி யால்தான் அவனே டெலிவிஷனில் வந்து பேசும்படி யாரும் கூப்பிடவில்லை. அவனே அப்படிப்பேசச் சொல்லு வதோ அல்லது அவனுடைய முகத்தை எல்லோரும் பார்க்கும்படி செய்வதோ மனித இனத்திற்கே பெருத்த அவமானம் என்பதல்ைதான் இதுபோன்ற வம்புக் கலகலப்பிலேயே வாணிகம் செய்பவர்களுக்குத் தங்கள் விருப்பத்தை அடக்கிக்கொள்ள வேண்டிய தாயிற்று. அவர்களுக்கும் மனித இனத்தில் பெருமை யைப்பற்றி அத்தனை நிச்சயம் இருந்தது.

கேப்டன் பம்கின்ஸ் நல்ல மனிதன்தான். அவனுடைய குற்றமெல்லாம் தான் கண்டதை ஒளிக் காமல் கூறியதே. இந்த உலகத்திலே எத்தனையோ உண்மைகளே மறைத்து வைக்கவேண்டும் என்பதை அவன் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. இந்தப் பெரிய குறையிருந்தாலும் பரவாயில்லை ; அவனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/46&oldid=616079" இலிருந்து மீள்விக்கப்பட்டது