பக்கம்:மாவிளக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ் 55

செய்தாகிவிட்டது. போகும்போது பாடிக்கொண்டே போனர்கள்.’

" பிறகு எப்படித் தீர்மானம் செய்தார்கள் ? அவர்கள்தான் பேசவே இல்லேயே ?”

  • அதுதான் விஷயம். அவர்கள் கம்மைப்போலப் பேசிப்பேசி ஒருவருடைய உள்ளத்தை மற்ருெருவர் தெரிந்துகொள்வதில்லை. அது பரிளுமத்திலே தாழ்ந்த கிலேமை என்று நினைக்கிருர்கள். பேச்சின் மூலம் கருத்தை வெளிப்படுத்துவதானால் உள்ளே ஒன்றை வைத்துப் புறத்தில் வேருென்றைச் சொல்ல முடியும். அதேைலதான் எல்லா விபரீதங்களும், பூசலும், போரும் ஏற்படுகின்றன என்பது அவர்களுடைய எண்ணம்.”

“பிறகு அவர்கள் எப்படித்தான் ஒருவரையொருவர் தெரிந்து கொள்கிருர்கள் ” என்று சற்றுப் பொறுமை யிழந்து கேட்டேன்.

“ அவர்களில் ஒருவர் கினைப்பதை மற்ருெருவர் அப்படியே உணந்துகொள்ளுகிருர்கள். வார்த்தையால் எண்ண்த்தைச் சொல்லவேண்டியதே இல்லை. உள்ள மும் உள்ளமும் உணர்ந்துகொள்கின்றன. அந்த உயர் நிலைமையை அவர்கள் எய்தியிருப்பதால், பேச்சுக்கு இட மில்லை. அதுமட்டுமல்ல. உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூற சந்தர்ப்பமே அங்கே கிடையாது. ”

" அப்படியானல் அது நரகமாகத்தானிருக்கும். ஒருவர் கினைப்பதையெல்லாம் மற்ருெருவர் அப்படியே தெரிந்துகொண்டால் உலகம் நிலைக்குமா ?”

" ஏன் நிலைக்காது? அந்த நிலையிலே உள்ளமே மாறியமைந்திருக்கும். குரோதமும், கபடமும், காமமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/57&oldid=616101" இலிருந்து மீள்விக்கப்பட்டது