பக்கம்:மாவிளக்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ் 57

என்னேச் சுட்டுவிடும் என்று இளநகையோடுதான் சொன்னாள். அந்த கிலேயிலும் வெறுப்பே இல்லே. அன்புதான் அந்த இளஞ் சிரிப்பில் தவழ்ந்தது.”

எனக்கு எரிச்சலுண்டாயிற்று. " உன்னே எதற்காகத் திருப்பி அனுப்பத் தீர்மா னித்தார்கள் : இங்கு அப்படி யாராவது வந்திருந்தால் கமது கண்காட்சிசாலையிலாவது வைத்திருக்காமல் விடுவோமா ?” என்று கோபத்தோடு கேட்டேன். -

  • மனவளர்ச்சியில் மிகவும் கீழ் நிலையிலிருக்கும் மனித இனத்தைச் சேர்ந்த ஒருவனே அங்கு விட்டு வைப்பது நல்லதல்ல என்பது அவர்கள் கருத்து. அங்கே காட்சி சாலை இல்லை; சிறையில்லை. அதனுல் என்ன எதேச்சையாகத்தான் அவர்கள் விடவேண்டி வரும். அப்படி விடுவது உசிதமல்ல என்று முடிவு கட்டி விட்டார்கள்.”

இதைக் கேட்ட பிறகுதான் நானும் கேப்டன் பம்கின்ஸின் மனநிலையைப் பற்றிச் சந்தேகமடைந்தேன். மனிதனைவிட மனவளர்ச்சியிலும் மூளையிலும் சிறந்த பிறவி இருக்க முடியுமா ? இருக்கவே இருக்காது. இவன் கூறுவதெல்லாம் அபத்தம். ராக்கெட் விமானம் கொஞ்ச தூரம் போனதும் வெடித்திருக்கும். இவன் பாரஷஅட்டின் உதவியால் இறங்கியிருக்கிருன். ராக் கெட் வெடித்த அதிர்ச்சியிலே மூளைக் கோளாறு ஏற் பட்டிருக்கிறது ; இதுதான் விஷயம் என்று கான் மற்ற வர்களுடைய தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்தேன். அதை வெளிப்படையாகச் சொல்லவும் தயங்கவில்லை. சிகேகம் பெரியதுதான். ஆனல், மனிதனுடைய மூளையின் பெருமை அதைவிடப் பெரியதல்லவர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/59&oldid=616106" இலிருந்து மீள்விக்கப்பட்டது