பக்கம்:மாவிளக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

இன்னும் ஒரு விஷயம். சிறு கதையிலே கதை ஒன்றும் இருக்க வேண்டியதில்லை. சம்பவங்களே இல்லாமல் உணர்ச் சியை மட்டும் விவரிக்கும் உயர்ந்த சிறுகதைகள் உண்டு. உள்ளத்தில் எத்தனையோ கிளர்ச்சிகள் குமுறுகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதிலே ஒரு குறிப்பிட்ட மின்னல் போன்ற பகுதியை விளக்கினல் அதுவும் சிறுகதைதான்.

ஆகவே, சிறு கதை சிறியதாக இருக்க வேண்டும் என்ப தில்லை ; அதில் கதை வேண்டும் என்பதும் இல்லை. அளவில் குறுகியும் கதையைத் தன்னகத்தே கொண்டதுமாகச் சிறு கதை இருக்கலாம் ; ஆல்ை, அளவும் கதையம்சமுமே சிறு கதை இலக்கணமல்ல.

சிறுகதைத் தொகுதிக்கு முகவுரை எதற்கு ? தேவை யில்லை என்பது என் கருத்து. கதைகளைப் படிப்போர் அனைவரும் முகவுரையைப் படிப்பார்கள் என்றும் நான் எதிர் பார்க்கவில்லை. நூலைப் படித்து முடித்த பிறகு நான் சில சமயங்களிலே முகவுரையைப் படிப்பதுண்டு. அவ்வாறு படிப்பதில் மிகுதியான பயன் அடைந்திருக்கிறேன்.

மாவிளக்கு என்ற தலைப்புக் கொண்ட இந்நூல் எனது ஐந்தாவது சிறு கதைத் தொகுப்பு. இதை வெளியிடு கின்ற மகிழ்ச்சியிலே சிறுகதையின் இக்காலப் போக்கைப் பற்றியும் இலக்கணத்தைப் பற்றியும் ஒற்றிரண்டு எண்ணங் களைக் குறிப்பாக உங்களுக்கு நினைவுபடுத்தலாம் என்று தோன்றியது. அதுவே இம்முகவுரைக்கு அடிப்படை. கதை களைப் படித்த பிறகாவது இதிலும் ஒரு பார்வை செலுத் துங்கள். வணக்கம்.

பெ. துாரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/6&oldid=615998" இலிருந்து மீள்விக்கப்பட்டது