பக்கம்:மாவிளக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மாவிளக்கு

' போன இருபது வருசமாக நானும் இந்தக் கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். மாரியாத்தாளுக்கு வருசத்துக்கு ஒரு தடவை மாவிளக்கு எடுக்கிறதுன்ன, எல்லோருக்கும் அதிலே ஆசைதான். இந்த வருசந்தான் நானே மாவிளக்கு எடுக்க முடியவில்லை. நல்ல வேளையா நீயே பட்டணத்திலிருந்து வந்துவிட்டாய், இனிமேலே ஒவ்வொரு வருசமும் இந்தக் காரியத்தை எனக்காக தோன் பண்ணவேணும்.”

" அடுத்த வருசத்திலே நீயே மாவிளக்கு எடுக்கலாமம்மா ? ஒரு சின்ன ஆப்பரேசன் செய்து விட்டால் கண்ரண்டும் மறுபடியும் கல்லாத் தெரியுமாம். அவர்கள் உன்னைப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு போகத்தான் வந்திருக்காங்க.”

" அதெல்லாம் இனி எதுக்கு, வள்ளியாத்தா ? என் காரியம் முடிஞ்சு போச்சு. இந்த மாவிளக்கோடு சரி.?? -

" அப்படிச் சொல்லாதே, அம்மா. உனக்கு இப்போ என்ன வந்துவிட்டது ? கண்ணிலே படலம் மறைச்சு இருக்குது. அதை நீக்கிவிட்டால் கண் கல்லாத் தெரியும். அப்புறம் தொந்தரவே இல்லை.”

' கண்ணேப் பற்றி என்ன ? நான் சொல்வது அதல்ல. குழந்தைக்கு முன்னலே அதையெல்லாம் பேசப்படாது. இருந்தாலும் உனக்குத் தெரிஞ்சிருக்கும்.” “ அம்மா, மாவிளக்கு அணையாமல்தான் வீட்டுக்கு வந்தது.”

' வள்ளியாத்தா, எனக்கு நீ ஒரு வாக்குக் கொடுப்பாயா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/62&oldid=616112" இலிருந்து மீள்விக்கப்பட்டது