பக்கம்:மாவிளக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவிளக்கு 65

“ இந்த விளக்குமாவைப் பண்ண நீயே வயலுக்குப் போய் அங்கே உதிர்ந்து கிடக்கிற நெல்லையெல்லாம் உன் கையாலேயே துழாவித் துழாவி எடுத்து வந்தா யாமே, அது நிஜமா ?”

  • ஆமா, அதற்கென்ன ?

“ ஏம்மா, வீட்டிலே கெல் இல்லையா என்ன ? அப்பாவிடம் கேட்டால் கொடுக்கமாட்டாரா ?”

" அப்பா கொடுக்காமிலா எனக்கு இப்போ சோறு கிடைக்குது ஆனால், மாவிளக்குப் பண்ண அந்த நெல் உதவாது.”

“ ஏம்மா உதவாது ? அதைத்தான் எனக்குச் சொல்லவேனும்.”

" நானே வேலை செய்து சம்பாதிச்சு கெல்லு வாங்கி அதைக் குத்தி அரிசி பண்ணவேணும். நானே இடிச்சு மாவாக்க வேணும். அதிலே மாவிளக்குப் பண்ணி மாரி யாத்தாள் கோயிலுக்குக் கொண்டு போக வேணும். வியாதி யெல்லாம் நீங்கி நீ உயிர்பிளேச்சு எழுந்தால் இப்படிச் செய்யறேன்னு மாரியாத்தாளே அப்போ ே குழந்தையாக இருந்தபோது வேண்டிக்கிட்டேன். போன வருசம் வரையிலும் கண்ணுத் தெரிஞ்சுது. பண்ணைக் காரர் வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னலும் நான் கூலிக்குப் போய் பணம் சம்பாதிச்சு மாவிளக்கு எடுத் தேன். இந்த வருசம் என்ன பண்ணறதுன்னு எனக்கு விசனமாக இருந்தது. கடைசியிலே இந்த யோசனை வந்தது. வயலிலே கெல் அறுவடை காலத்தில் எத்த னையோ பேர் வேலை செய்ய முடியாத கிழவிகள் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/67&oldid=616122" இலிருந்து மீள்விக்கப்பட்டது