பக்கம்:மாவிளக்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மா விளக்கு

கருத்து எப்படி இருந்தாலும் அவனுடைய எழுத்திலே காதலின் மூச்சு எல்லோருடைய உள்ளத்தையும் கவரு மாறு அப்படி வெளிப்படும்.

' காதல் உணர்ச்சியும் உனக்குக் கிடையாது ; மக்களுக்கு அதனுல் உண்டாகும் துன்பமும் உனக்குத் தெரியாது. பிறகு எதற்காகக் காதல் கதை எழுது கிருய் ?” என்று கேட்டால், மக்களுக்கு அதுதான் பிடிக்கிறது; அதற்காகப் பொய்யும் புனேசுருட்டும் சேர்த்து எழுதுகிறேன்” என்று அவன் சற்றும் தயங்கா மல் மறுமொழி சொல்லுவான். ' எனக்குக் காதல் அனு பவம் தேவையில்லை. எத்தனையோ தமிழ்க் கவிஞர் களும், ஆங்கிலக் கவிஞர்களும், கதை ஆசிரியர்களும் அதைப்பற்றி விண்முட்டிப் போகும்படி புளுகி வைத் திருக்கிருர்கள். அவற்றை வைத்துக்கொண்டு நான் என் ஆயுள் முழுவதும் கதையளக்க முடியும்” என்று மேலும் அவன் விரிவுரையாற்ற ஆரம்பித்து விடுவான்.

அவன் இவ்வாறு பேசுவதைக் கேட்டு எனக்குச் சில வேளைகளிலே பொல்லாத எரிச்சல் உண்டாகும். ஒரே அடியில் அவன் மூளே சிதறும்படி செய்து விடலாமா என்றுகூட ஆத்திரம் பொங்கும். அதே சமயத்தில் காதலின் வலிமையை அறியாத அவனையே அவள் நினைத்துக்கொண்டிருக்கிருளே என்று சுந்தரி யின்மேல் எனக்குக் கோபமுண்டாகும். இந்த இரண்டு உணர்ச்சிகளும் ஒரே சமயத்தில் உண்டாவதால் நான் முத்துசாமியை ஒன்றும் செய்யமுடிவதில்லை. மேலும் அவன் எனது உயிர்த் தோழன்; அந்த நட்பு வலிமையும் எப்படியோ மேலெழுந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/72&oldid=616132" இலிருந்து மீள்விக்கப்பட்டது