பக்கம்:மாவிளக்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் விஷயம் 73

பேசினேன். அவள் கொஞ்சங்கூட இளகவில்லை. முத்துசாமி பிரிந்து போனபிறகு அவளுக்குப் பேச்சும், சுருண்டு விழும் அலேக்காட்சியும் சப்பென்று தோன்றின. அதையறிந்த கான் முத்துசாமியின் உள்ளத்திலே காதல் என்ற அம்சமே கிடையாது என்பதை அவளுக்கு நன்ருக எடுத்துக்காட்ட முயன்றேன். அவள் யாதொரு பதிலும் கூறவில்லை. ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டு மறுபுறம் திரும்பி உட்கார்ந்துகொண்டாள்.

பிறகு காங்கள் பிரிந்தோம். அன்றிரவு எனக்குச் சிறிதும் தாக்கம் பிடிக்க வில்லை. வாழ்க்கை இருளடைந்துவிட்டது போலத் தோன்றியது. சுந்தரியின் மனத்திலே இடம் பெருமல் உலகத்தில் வாழ்வது பயனில்லை என்று நினைத்தேன். இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டே எவ்வளவு நேரம் இருந்தேனே தெரியாது. என் முகத்திலே வேதனையின் சாயல் எவ்வளவு ஆழ்ந்து படிந்திருந்ததோ அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், திடீரென்று. என் அறைக்குள் புகுந்த முத்துசாமி என் முகத்தைப் பார்த்ததும் திகைத்து அப்படியே கின்றுவிட்டான். கன்னத்திலே வழிந்திருந்த கண்ணிரையும் அவன் பார்த் திருக்கிருன்.

விசனத்திலும், சிந்தனையிலும் மூழ்கியிருந்ததால் அறையில் விளக்கெரிவதை நான் கவனிக்கவில்லை. இரவிலே நீண்ட கேரமாகியும் விளக்கெரிவதை முத்து சாமி பார்த்துவிட்டு என் அறைக்கு வந்திருக்கிருன், அவனும் கானும் ஒரே மாணவர் விடுதியில்தான் வசிக் கிருேம். - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/75&oldid=616138" இலிருந்து மீள்விக்கப்பட்டது