பக்கம்:மாவிளக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மா விளக்கு

குற்றத்திற்காக ஆயுள் தண்டனே அனுபவித்துக் கொண்டிருக்கிருன். -

முத்துசாமி கிழவனைக் குத்திக் காண்பிக்க கினைக்க வில்லை. தான் நிரபராதி என்பதை வற்புறுத்தவே எண்ணின்ை. இருப்பினும் எதிர்பாராத விதமாக அவனுடைய பேச்சு கிழவன் உள்ளத்திலே சுருக்கென்று தைத்ததைக் கண்டு, “ தாத்தா, நான் சொன்னது தப்பு. உங்களைக் குறிப்பிட்டு நான் பேச நினைக்கவில்லை” என்று தாழ்ந்த குரலில் சொன்னன். கிழவனிடத்திலே உண்மையாகவே அவனுக்கு மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரே சிறையில் அவர்கள் இருவரும் தற்செயலாக அடைப்பட்டுக் கிடந்ததால் இருவருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டதென்ருலும் அது எப்படியோ வேரூன்றிக் கொண்டது. கிழவன் தன் மனைவியோடு சரியான முறையில் குடும்பம் கடத்தியிருந்தால் இப்படி ஒரு பேரைேடு வாழ்ந்திருப்பான். இப்பொழுது அவ னுடைய கற்பனையில் முத்துசாமி பே ர ன க த் தோன்றின்ை.

கிழவன் சிரித்தான். 'பார்த்தாயா, முத்து, இப் படித்தான் ஆத்திரமாக அன்றைக்கும் எதையாவது சொல்லியிருப்பாய். அதல்ைதான் ஜெயிலுக்கு வர வேண்டிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.”

1 இல்லை தாத்தா, நான் ஒரு குற்றமும் பண்ண வில்லை. வேணுமென்று அந்த வேலுச்சாமிக் கவுண்டன் என்ன அந்த அடிதடி வழக்கில் சேர்த்து வைத்து விட்டான். நான் ஒரு பாவமும் செய்யவில்லே. அடிதடி நடந்தபோது நான் பக்கத்தில்கூட இருக்கவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/8&oldid=616002" இலிருந்து மீள்விக்கப்பட்டது