பக்கம்:மாவிளக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாவிளக்கு

முத்தி விலகியவுடன் சரோஜாவின் பொம்மை அவளுக்கு முத்தியாகி விட்டது. வேலேக்காரி முத்திக்குத் திட்டும் வசவும் மட்டும் கிடைக்கும். பொம்மை முத்திக்கு அடியும் கிடைத்தது. பொம்மை முத்தி சரோஜாவின் வேலைக்காரி. அம்மாளுடைய வசவு வார்த்தைகளே சரோஜாவிடம் அப்படியே கேட்கலாம். முத்தி அவற்றைப் பொறுமையோடு கேட்டு வந்தது. ஆல்ை, அடியை அதனல் தாங்க முடியவில்லே. முதலில் அதன் மேலேயிருந்த நார்ப்பட்டு ஆடை கிழிந்தது. பிறகு காலொன்று கொண்டியாயிற்று. தலையிலே ஒரு வெடிப்புத் தோன்றியது. கண் ஒன்று கொள்ளே யாகும்படி சரோஜாவுக்கு ஒரு நாள் கோபம் வந்து விட்டது. -

வேலேக்காரி முத்தி தானே வேறிடம் தேடிக் கொண்டாள். பொம்மை முத்தி அப்படிச் செய்ய வில்லை. ஆனால், கண் கொள்ளேயான பிறகு, சரோஜாவே அதைத் தூக்கி எறிந்து விட்டாள். ஆடை கிழிந்து, உறுப்புக்கள் சீரழிந்து போன பொம்மை முத்தி குப்பைக்குப் போயிற்று.

புதிய வேலைக்காரி குப்பையில் கிடந்த முத்தியைத் தேடி எடுத்தாள். அவள் வீட்டிலே தனியாகத் தவிக்கும் ஐந்து வயசுக் குழந்தைக்கு அதைக் கொடுக்க லாம் அல்லவா ? வேலைக்கு வந்த புதிதில் சில நாட்கள் அவள் தன் குழந்தையைக் கூடவே அழைத்து வந்தாள். ஆனால், அந்த எஜமானி வீட்டில் அது சரிப்படாது என்று விரைவில் தெரிந்து போய்விட்டது. அதனல் வீட்டிலேயே குழந்தையை விட்டு வந்தாள். அதைப் பார்த்துக் கொள்ள அங்கே யாரும் இல்லை. தனியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/80&oldid=616148" இலிருந்து மீள்விக்கப்பட்டது