பக்கம்:மாவிளக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மா விளக்கு

அடிக்காமல் விடப்படாதா-இல்லே. ரொம்ப நாள் பழக்கம் ; லேசில் விட்டு விடுகிறதா ? அன்றும் சிலருக்குப் பிரம்புப் பூசை கிடைத்தது. -

அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த சனிக்கிழமை யன்று காலே நேரத்தில் மட்டுந்தான் பள்ளிக்கூடமுண்டு. ஆகவே, மத்தியானம் சாப்பிட்டதும் பம்பாய் ஷோ , என்னும்படியான அந்தக் கேளிக்கை விளையாட்டுக் கண் காட்சியைக் காணச் செல்லலாம். அங்கே பந்தயங்களும் சூதாட்டங்களுந்தான் முக்கியமான அம்சங்கள். வாத்தி யாருக்கு ஏற்ற அம்சங்களல்லதான். ஆனால், அம்மாதிரி நினைத்தால் முடியுமா ? சட்டென்று பணம் சம்பாதிக்க வேறு வழி என்ன இருக்கிறது ? “ எனக்குமட்டும் ஒரு ஐநூறு வந்துவிட்டால் இந்தத் தரித்திரம் பிடித்த வேலையைத் தூக்கி எறிந்து விடலாம் '-என்றிப்படி யெல்லாம் ராமசாமி வாத்தியார் எண்ணித் திட்டம் போட்டு விட்டார். ஒரங்களிலெல்லாம் நூல் பிரிந்து தொங்கும்படியான அவர் சட்டைப் பையில் அன்று பெற்றுக்கொண்ட சம்பளம் ரூபாய் முப்பதும் பஞ்சப் படி ரூபாய் இருபதும் ஒசையிட்டுக் கொண்டிருந்தன.

சூதாட்டக் காரியத்தில் பிரவேசிப்பதற்கு ராமசாமி வாத்தியார் எத்தனையோ நாட்கள் யோசனை செய் திருக்கிரு.ர். யோசனை யென்ருல் ஒரு வகையான யோசனையல்ல. தலே கீழாக, கீழ் மேலாக எல்லாம் பார்த்திருக்கிரு.ர். பல வருஷங்களாக ஜில்லா போர்டு தலைவருக்கும், அங்கத்தினர்களுக்கும், ஜூனியர் டெபுடி இன்ஸ்பெக்டருக்கும், அவர் சேவகனுக்கும், இன்னும் வேலே பார்த்த ஊர்களிலுள்ள கனதனவான்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/86&oldid=616161" இலிருந்து மீள்விக்கப்பட்டது