பக்கம்:மாவிளக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 6 மா விளக்கு

அதிலிருந்த மூன்று மிருகங்களின் படங்களே வெளிப் படுத்தி, மெழுகு ரட்டில் உள்ள அதே மிருகங்களின் படங்களோடு இணேத்து வைக்கிருன். எந்த மிருகத்தின் மேல் பணம் வைத்தாலும் அதன் பிரதி ஒன்று உறையி லிருந்து கிடைத்தால் அவ்வளவுக்கவ்வளவு பணம் கிடைக்கும் ; அதே மிருகத்தின் படத்தில் இரண்டு பிரதிகள் வந்துவிட்டால் இரட்டிப்புத் தொகை கிடைக்கும். ஒன்றும் வரவில்லையென்ருல் வைத்த பணத்தை இழக்க வேண்டும்.

இந்த ஆட்டம் வெகு சுலபம். இதற்குத் திறமை யொன்றும் தேவையில்லே. பணத்தை ஏதாவது ஒரு மிருகப் படத்தின் மேல் வைக்க வேண்டியதுதான். அதன் பிரதி உறையிலிருந்து கிளம்பினல் லாபம் ; இல்லாவிட்டால் இல்லை. அவ்வளவுதானே ? ராமசாமி வாத்தியாருக்கு இது ரொம்பவும் பிடித்தமாக இருந்தது. அங்கேயே ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து மேஜையின் மேல் கையை ஊன்றிக் கன்னத்தில் உள்ளங்கையைக் கொடுத்துக் கொஞ்ச நேரம் ஆட்டத்தைக் கவனிக்க லானர். முதலில் சற்று நேரமாவது பிறர் ஆடுவதையும், ஆட்டத்தின் போக்கையும் கவனிக்க வேண்டாமா ? திடுதிப்பென்று முன்னும் பின்னும் தெரியாத காரி யத்தில் இறங்கிவிட முடியுமா ? அவ்வளவு அவசரக் காரரல்ல ராமசாமி வாத்தியார்.

பிறகு ஒரு காலணுவை எடுத்து ஒரு படத்தின்மேல் வைத்தார். அப்புறம் ஒரு காலணு. இப்படி ஒரு பதினைந்து கிமிஷங்கள் கழிந்தன. வருவதும் போவது மாக அதுவரை விசேஷ லாபமோ நஷ்டமோ எதுவும் ஏற்படவில்லே. ராமசாமி வாத்தியார் பார்த்தார். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/88&oldid=616165" இலிருந்து மீள்விக்கப்பட்டது