பக்கம்:மாவிளக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மணி 89

இப்பொழுது ஆட்டம் பலத்துவிட்டது. யானே மேல் முந்நூறு ரூபாய் கிடக்கிறது. எல்லாம் ராமசாமி வாத்தியாருடையது. ஆனால், அவர் அதைத் தொட வில்லை.

“வை, ராஜா வை; வைக்க வைக்க ஐயம். வை, ராஜா வை ”...... இன்னும் ஒரு உறை வெளியில் வந்தது. அதிலும் ராமசாமி வாத்தியாருக்கு ஜயந்தான். மேலும் ஒரு யானே. ஆனால், அப்பொழுதும் அவர் பணத்தைத் தொடவில்லே. சில பேர், “ என்னடா இந்த மனுஷ னுக்கு இத்தனே ஆசை ஆகாது” என்று கூடப் பேசிக் கொண்டார்கள். யானேயின்மேல் அறுநூறு ரூபாய் கோட்டுக்களாகக் கிடந்தது.

மற்ருேர் ஆட்டம். ஆனால், இந்த முறை யானே வரவில் ல. அத்தனே ரூபாயையும் ஆவலோடு ஆட்டக் காரன் வாரிக் கொண்டான். அப்பொழுதுதான் ராம சாமி வாத்தியார் ஒரு பெரு மூச்சுவிட்டார். ஆனால், அத்த ைநேரமும் தாம் வழக்கம்போலத் தூங்கி விட்டதை யாருக்கும் காண்பித்துக் கொள்ளவில்லை. அப்படியே கடைக்கண்ணுல் சுற்றுமுற்றும் பார்த்தார். யான காலியாக இருந்தது. அடடா, தினமும் போலப் பதினைந்து நிமிஷம் தாங்கிவிட்டேனே. பணம் முதல் ஆட்டத்திலேயே போய்விட்டது போலிருக்கிறது. போனதைக்கூட நான் பார்க்கவில்லை” என்று எண்ணிக் கொண்டே எழுந்து புறப்பட்டார். அவருடைய ஆகாயக் கோட்டை யெல்லாம் தூளாகிவிட்டது.

யாராவது தம்மை அங்கே பார்த்துவிட்டால் கேவலமாகுமே என்று இப்பொழுது அவருக்கு ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/91&oldid=616171" இலிருந்து மீள்விக்கப்பட்டது