பக்கம்:மாவிளக்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்கு

முதல் வகுப்பு ரயில் பெட்டிகளின் வெளியே செருகியுள்ள ரிசர்வேஷன் கார்டுகளை ஒவ்வொன்ருகப் படித்துக்கொண்டே அவன் கடந்தான். சுந்தரவதனன் என்று ஒரு கார்டில் பெயரைக் கண்டதும் அந்தப் பெட்டியில் தனது படுக்கையை விரிக்கும்படி போர்ட்ட ருக்குக் கம்பீரமாக உத்தரவு கொடுத்தான். பெட்டிக் குள்ளே நுழைந்து அங்கிருந்த கிலேக் கண்ணுடியில் ஒரு முறை தனது முகத்தைப் பார்த்துக் கொண்டான்.

‘’ சுந்தரவதனன், சுந்தரவதனன்-என்ன அழகான பெயர் ! ஆனால், முகத்தைப் பார்த்தாலோ ?-இந்த நினைப்பு அவனுக்கே சிரிப்பை யுண்டாக்கியது.

எட்டுக்கால் பூச்சி மீசையும், உதட்டை வெளியே தள்ளித் துறுத்திக் கொண்டு தோன்றும் பல் வரிசையும் அவனுடைய முகத்திற்கு ஒரு விநோதமான தோற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/93&oldid=616175" இலிருந்து மீள்விக்கப்பட்டது