பக்கம்:மாவிளக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மா விளக்கு

யிலே மற்றவர் அமர்ந்து தாடியை விேக் கொண்டி ருந்தார். அந்தப் பெட்டியில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லே.

சரியாக இரவு எட்டேகால் மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிற்று.

சுமார் பதினேந்துகிமிஷம் இருவரும் மெளனமாகவே இருந்தனர். அந்தப் பதினைந்து நிமிஷம் ஒரு யுகம்போல இருந்தது. சுந்தரவதனனல் அதற்குமேல் அந்த மெளனத்தைத் தாங்க முடியவில்லை. சையத் காதர் என்பது தாங்கள்தானே ?” என்று பேச்சை ஆரம்பித் தான்.

அவன் பேச்சைக் கேட்டு மற்றவருக்கு ஏதோ சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதனால் அவர் பதில் கொடுப்பதற்குச் சற்று தாமதமாயிற்று. ' உங்கள் பெயர் எப்படி எனக்குத் தெரிந்தது என்று ஆச்சரியப்படு கிறீர்களோ ? அதெல்லாம் வெகு சுலபம். எதையும் கவனித்துப் பார்க்கும் திறமை கொஞ்சம் இருந்தால் போதும் ” என்று அவன் சற்றுப் பெருமையோடு கூறினன்.

" அதெல்லாம் ஒன்றுமில்லை...... நான் என்னவோ யோசனை செய்து கொண்டிருந்தேன்.......ம்...தாங்கள் எது வரையிலுமோ ?” என்று சையத் காதர் கேட்டார். ' ரொம்ப துாரம் ஒன்றுமில்லை. சும்மா அப்படியே புறப்பட்டேன்’ என்று அயைாசமாகப் பதில் கூறினன் சுந்தரவதனன். பதில் கூறிவிட்டு அவன் யோசனையில் ஆழ்ந்தான். “ இந்த மனிதன் குரல் பழகின குரலாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/96&oldid=616181" இலிருந்து மீள்விக்கப்பட்டது