பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தனர்.47 மணப்பாறை பாளையக்காரரது நடவடிக்கைகளை இரகசியமாகக் கண்காணித்து வருமாறு இராமநாதபுரம் கலெக்டருக்கு கும்பெனியார் உத்திரவு அனுப்பினர்'48 மற்றும் குளத்துர், கோல்வார் பட்டி, பாளையக்காரர்களைக் கைது செய்து இராமநாதபுரம் கோட்டைக்குள் சிறைவைத்தனர். 48முதுகுளத்துர் பகுதி கிளர்ச்சிகளை ஊக்குவித்து வந்த முத்தையாபிள்ளை, பாண்டியன் பிள்ளை ஆகிய பெருந்தலைவர்களைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் பூட்டி வைத்தனர். தளபதி மயிலப்பன் சேர்வைக்காரரைப் பிடிக்க இயலாத காரணத்தினால் அவரது குடும்பத்தினரை பிணையாளிகளாகக் கைப்பற்றி, இராமநாதபுரம் கோட்டையில் அடைத்து பாதுகாத்து வந்தனர்.50

கும்பெனியாரது மக்கள் விரோத காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அப்போதைக்கப்போது அறிந்து வந்த சிவகங்கைச் சேர்வைக்காரர்களது உள்ளத்தில், கும்பெனியாரது, உண்மைக்கு மாற்றமான, பிரமையான தோற்றத்தை உணர்ந்த பிறகும் அவர்களது அகக்கண்கள் எப்படி திறக்காமல் இருக்க முடியும்? “கடுமையான நடவடிக்கைகள் மூலம் பாளையங்களைப் பறிமுதல் செய்தல், தூக்குத்தண்டனை, நாடுகடத்தல், பாளையக் காரர்களது கோட்டைகளை இடித்து அழிமானம் செய்தல், அவர்களது பாரம்பரிய மரபுகளை அனுபவிக்க இயலாது செய்தல், இராணுவ, அரசுப்பணியாளர்களை அவர்களது பதவிகளின்றும் நீக்குதல், வரி வசூல் கொடுமைகள் - ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எதிர்பார்த்த இணக்கமான சூழ்நிலைக்கு எதிரான விளைவுகளை உருவாக்கின. ஏற்கனவே சமுதாயத்தின் ஏனைய முக்கியமான பிரிவினரான விவசாயிகளும் தொழிலாளிகளும் பரங்கிகளது சுயநலம், தலையீடு ஆகிய காரணங்களினால் அருவருப்படைந்து இருந்த அணியினருடன் இந்த அணியினரும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைப் பெரிது படுத்தினர். அன்றைய நிலையில் இத்தகைய பரங்கிகள் மீதான எதிர்ப்பு உணர்வு


48 Ibid 22-3-1799

49 Ibid vol. 1124 22-10-1799

50 Madurai District Records, : vol. 1133, 19-3-1800.

51 Rajayyan K. Dr: South Indian Rebellon, 1800-1801 AD (1977) page No. 42