பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 அடுத்த நாள் "கோபாலனை வேதாளம் பிடித்துக் கொண்டது” என்ற செய்தி ஊர் எங்கும் பரவி விட்டது. இதைக் கேள்விப் பட்ட பள்ளிக்கூடத்து ஆசிரியர் கோபா லனைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார். கோபாலன் முதல் நாள் மாலை தான் காட்டுக்குச்சுப்பி பொறுக்கச் சென்றது முதல் கனவில் கண்ட செய்திகளையும் கடைசியில் பண்டாரம் கட்டித் தூக்கி வந்த விவரத்தையும் சொன்னான், உடனே ஆசிரியர், கோபாலனுடைய அம்மாவை அழைத்து, அவனை அவிழ்த்து விடும்படி கூறி, வேதாளம் பிடிக்கவில்லை யென்று சமாதானப்படுத்தினார். முதல்நாள் பள்ளியில் தான் வேதாளக் கதை கூறிய விவரமும், பையன் தினசரிப் பத்திரிகை படித்து வந்ததால் அறிந்த விவரமும், சுப்பிபொறுக்கப் புறப்படும்போது பாட்டி பயமுறுத்தியனுப் பியதும் எல்லாம் சேர்ந்து மூளையைக் குழப்பி விட்டதென்றும், அவன் முருங்கை மரத்தடியில் தூங்கும் போது அவன் மூளையிலே ஏற்பட்ட கற்பனையே கனவாக மாறிவிட்டதென் றும் விளக்கமாக எடுத்துக்கூறினார் ஆசிரியர். அப்பொழுதே விபூதி மந்திரித்த பண்டாரம் சொல்லிக் கொள்ளாமல் கோயி லுக்கு நடையைக் கட்டி விட்டார். அவனுடைய கதையைக் கேள்விப்பட்ட பள்ளி மாணவர்கள் அன்று முதல் அவனை "மாஸ்டர் கோபாலன்" என்று நையாண்டி செய்யலானார்கள்.


செந்தமிழ்ப் பதிப்பகம், புதுக்கோட்டை.