பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல், குறிப்பாக மின்னியல், காந்தவியல், மின்னனுவியல் ஆகியவற்றில் காணப்படும் அடிப்படை விதிகள், கோட்பாடுகள், தற்கோள்கள், வரையறைகள், விளைவுகள் போன்றவை முழுவதுமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கருவிகளின் அமைப்பு, செயல்முறை, படித்து மின் சுற்றுக்களின் படங்கள் ஆகியவையும் இங்கு இடம் பெறுகின்றன. மின் உறுப்புகளின் அடையான இடுகுறிகளில் விளக்கத்தைத் தொகுப்பினுள்ளே வடிவியல் உருவகங்கள் என்பதின் கீழ்க் காணலாம். ஒவ்வொரு கலைச் சொல்லும், குறிப்பாக எந்தெந்தத் துறையில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் ஆங்காங்கே பிறைக்கோடுகளுக்குள் சுருக்கக் குறிப்பில் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அயராதியின் இறுதியில், படிப்பவருக்குப் பயன் தரும் வண்ணம் கலைச்சொற்களின் தமிழ் அகர வரிசைப் பட்டியலும், மேற்கோள் நாய்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளன. கலைச் சொய்வின் உருவாக்கப் பணியில் இது ஒரு கன்னி முயற்சி விபத்தரு வகையில் மாந்து வரும் 'எலக்ட்ரானியல்' யுகம் என்று கூறப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டு அறிவியான மின்னணு மின்னியலைப் பற்றிய பல செய்திகளைத் தமிழறிந்தோர் யாவரும் அறிய இந்த நூல் உதவும். இவ்வியலின் தேவையான அடிப்படைக் கலைச்சொற்களை இந்நூல் தருவதால், புதிய பல நூல்களைத் தமிழில் எழுத இது ஒரு தூண்டுகோலாகவும் அமையும். இவ்வகராதியில் கலைச் சொற்கள் சில விடுபட்டுப் போயிருக்கலாம். மேலும், பொருத்தமான புதிய கலைச்சொற்களை இயற்றவும் வழியுண்டு அடுத்து வரும் பதிப்புகளில் இத்தொகுப்பைச் செம்மைப்படுத்தவும், விவு படுத்தவும் அறிவிடகா கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குறுகியகால ஆய்வுத் திட்டத்தின் கீழ் உருவாகிய (Bsn) இந்நூல் திருத்தம் செய்யட்டற்ற இப்பொழுது வெளிவருகிறது. இந்தக் குறுகிய கால ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி குறிப்பாக, தேவைப்படும் போதெல்லம், கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்து, ஆய்வுக் குறிப்புகள் தேட வழிமுறைகள் காட்டி,