பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் கி. கருணாகரன் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். 613 005 அணிந்துரை அறிவியல் கல்வி, அறிவியல் ஆய்வு, அறிவியல் கருத்துப் பரவலாக்கம், அறிவியல் உணர்வு போன்றவை இன்றைய அறிவியல் யுகத்தின் விளைவாகச் சமுதாயத்தில் தோன்றி வருபவையாகும். எந்தவொரு நாடும், சமுதாயமும் இத்தகைய தேவைகளைப் புறக்கணிக்க முடியாது : புறக்கணிக்கவும் கூடாது. மிகவேகமாக ஏற்பட்டுவரும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாகப் பல்வேது புதிய கோட்பாடுகளும் கொள்கைகளும் உலகெங்கும் பல்வேறு மொழிகளிலே இடம் பெற்று வருகின்றன. இத்தகைய கோட்பாடுகளையும் கொள்கைகளையும், நாம் பயன்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும். நம்முடைய மாணவர்களுக்கு அறிவியல் அறிவைக் கற்க்க வேண்டியுள்ளது. நம் ஆய்வாளர்கள் அறிவியல் ஆய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களின் வாயிலாக அறிவியல் கருத்துகளையும் செய்திகளையும் பலருக்கும் பயன்படும் வகையில் கொண்டு செல்லவேண்டியுள்ளது. அறிவியல் உணர்வினையும் போட்ட வேண்டியுள்ளது. இப்பணிகளுக்காக அறிவியல் துறைகளில் கட்டுரைகள், பாடநூல்கள், ஆய்வுரைகள், அறிவியல் கோட்பாட்டு விளக்கங்கள், அறிக்கைகள், அறிவிப்புகள் போன்றவற்றையெல்லாம் உருவாக்க வேண்டியுள்ளது. எனவே இவற்றை முறையாகவும் விரைவாகவும் நிறைவாகவும் செய்வது கல்வியாளர்களின், ஆய்வாளர்களின் குறிப்பிடத்தக்க பணியாகும். அறிவியல் கோட்பாடுகளை, கொள்கைகளை முறையாக எடுத்துச் சொல்லத் தொடக்க நிலையில் தேவையானவை அவற்றிற்கான கலைச்சொற்களேயாகும். கலைச்சொற்கள் எளிமையானவையாகவும் கருத்தாடலில் ஆற்றல் பெற்றவையாகவும், புரிதிறனை அதிகப்படுத்துவனவாகவும் அமைந்தால், அறிவியல் கருத்து வெளிப்பாடு நேரடியாகவும் பொருண்மைக் குழப்பம்