பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதுமின்றியும் உரிய முறையில் உரிடவரைச் சென்றடையும். எனவே, அறிவியல் கருத்து வெளிப்பாட்டிற்குத் தேவையான கலைச் சொற்களை உருவாக்குவதும் அவற்றைப் பரவலாக்கத்திற்குக் கொண்டு வருவதும் அறிவியல் தமிழ் உருவாக்கத்தில் இன்று விரைந்து மேற்கொள்ள வேண்டிய தேவையான ஆக்கப் பணிகளாகும். தொடக்க காலத்தில் எழுத்துப்பெயர்ப்பு மொழிபெயர்ப்பு முறைகளில் இத்தகைய கலைச்சொல்லாக்கப் பணி அமைந்து வந்தது. எடுத்துக்காட்டாக 'Oxygen' என்பதைத் தொடக்கத்தில் 'ஆக்ஸிஜன்' என்றும், அதனைத் தொடர்ந்து பிராணவாயு உயிர்வாயு என்று மொழி பெயர்த்தும், பிறமொழிக் கலப்போடும் எழுதி வந்தநிலையும் மாறிப் பின்னர் உயிர்வளி என்று நிலைபேறாக்கம் செய்ததையும் கலைச் சொல்லாக்க வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு தமிழாக்கமும் தமிழில் கலைச்சொல் உருவாக்கமும் நிலைபேறாக்கம் செய்யப்பட்டால் அது உண்மையிலேயே மொழிப்பயன்பாட்டின் ஆற்றலைப் பெருக்கும் என்பதில் ஐயமில்லை . மொழியின் தனித்தன்மையும் பண்பும் சிறப்பாகப் பேணப்படுவதற்கும் இம்முறை வழிவகுக்கும். தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்கனவே பலதுறை சார்ந்த கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது. இவ்வகராதி ஒவ்வொரு கலைச்சொல்லிற்கும் விளக்கம் தருவதோடு உரிய இடங்களில் வரைபடங்களையும் தருகிறது. இதனைத் தொடர்ந்து உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி வெளிவரும். இந்த அகாரதியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால ஆய்வுத் திட்டத்தின் கீழ்ச் செம்மையாக உருவாக்கியதோடு அச்சிடும் இந்த நேரத்தில் தேவையான திருத்தங்களையும் செய்து கொடுத்த பேராசிரியர் இரா. சபேசன் அவர்களுடைய அறிவியல் தமிழணாவைப் பாராட்டுகிறேன். கலைச்சொல்லாக்கம் முக்கியமான பணி என்றாலும் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் பாட நூல்களை உருவாக்கும் பணியே நம்முடைய சிறப்பு நிலைக் குறிக்கோளாகும். எனவே அறிவியல் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற மொழி நடையை