பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIT படநூல் நிறுவனம், சு.கே நிலையம், பூச.கோ. பொறியியல் கல்லூரி போன்ற நிறுவனங்களின் பாராட்டத்தக்க முயற்சிகளால் மின்னியல் மின்னனுவியல் கலைச்சொற்கள் பல உருவாக்கப் பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில், அந்தக் கலைச்சொற்களில் பொருத்தமானவை யாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும், மேற்கோள் பட்டியலில் காணப்படும் நூல்கள் பலவற்றிலிருந்து கிடைத்த கலைச்சொற்கள் தேவைப்படும் மாற்றங்களோடு ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. தவிர, புதிய கலைச்சொற்கள் பல, கருத்தமைவை (concepy) ஆதாரமாகக் கொண்டு புனையப் பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 2500 கலைச்சொற்களை இந்நூலில் காணலாம். இயன்றவரை தமிழ் மொழி மர ைபெட்டிய ஒலிக்குறிப்பே பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. எனினும், வழக்கத்தின்பால் ஒன்றிய சொற்கள் (காட்டாக எலக்ட்ரான், லேசர், பினாடிக், ரேடியோ, டிரான்சிஸ்டர், ரேடார் மைக்ரோ அலை போன்றயை பொதுச் சொற்களாகக் கருதப்பட்டுச் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மொழி வாயிலாக உயர் கல்வி கற்கவும், மேல் நாட்டு ஆய்வு நூல்களைப் படித்துப் பயன் பெறவும், ஆய்வுத்துறையில் ஈடுபடவும் வழி வகுக்கப்படுகிறது எனலாம். "அனைத்து நாட்டுப் படித்தா" (SYSTEME INTERNATIONALE) அலகுகளே, இத்தொகுப்பில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அலகுக் கலைச் சொற்கள், கலைச் சொற்றொடர்கள், அறிவியல் வழக்கையொட்டி ஜூல் (JOULE) ஹென்ரி (HENRY) , ஹர்ட்ஸ் (HEKIA போன்றவை அதே ஒலிக் குறிப்புடன் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. பயன்படுத்தப்படும் இடம் கண்டு, கலைச்சொற்களின் பொருள் காண வேண்டிய நிலைகளில், பொருள் விளக்கங்கள் இன்றியமையாதவையாகும். காட்டாக Chungs, unsform, vary, conver ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கீடாக, "மாற்று" என்ற சொற்றொடரே பயன் படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அது போலயே Machine, in- tummy arta, ania, yam ஆகியவற்றிற்கு முறையே பொறி, கருவி மானி காட்டி) - சாதனம், அமைவு என்ற சொற்கள் குறிப்பாகப் பயன்படுத்தப் பட்டிருப்பினும், அவை செயல்படும் விதம், ஆக்கப் பயன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆங்காங்கே மாற்றுப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.