பக்கம்:மின்னல் பூ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாராசாரி

அருகில் நின்று குழவிநிலையில்
அன்னை போலவோர்
ஊசலாடும் மரஞ்செய் குதிரை
ஊர்ந்து மகிழ்ந்திடப்
பாச முடனே பரியிலேற்றும்
பண்பிண ரில்லையே
என்று வெருண்டு நின்றமகனை
எண்ணி வானிலே
கன்றி மருகிக் கண்கள் சோரக்
கலங்கும் அன்னை தான்—
வாழ்வு தருநல் வாய்ப்பைப்பற்ற
மருளும் மனத்தினர்
தாழ்வை யன்றி வெற்றிமாண்பு
தாங்க வல்லரோ?


பாராசாரி கண்ணைக் கவர்ந்து கம்பீரமாக அருகே நிற்கிறது. தேசிங்கு துணிவோடு அதன் மீது பாய்ந்தேறினான். உலகோர் புகழ வெற்றியடைந்தான். ராஜாதேசிங்கு கதை இது. வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கு வேண்டிய நல்ல வாய்ப்பு நம் முன்னே பாராசாரி போல நிற்கிறது. அதன் பிடர் பிடித்து உந்தித் துணிவோடு செயலாற்றுகிறவன் புகழ் பெறுகிறான். அன்னை முகம் நோக்கும் பிள்ளையைப்போலப் பிறரை எதிர்பார்த்து நிற்பவன் வாழ்க்கையிலே தோல்வியடைகிறான்.

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/105&oldid=1121445" இலிருந்து மீள்விக்கப்பட்டது