பக்கம்:மின்னல் பூ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்ணில்லாமலே

கண்ணில் லாமலே கோலதே கண்ணாய்
மண்ணினைத் தொட்டு மெல்லக்கால் வைத்து
“பண்ணிய பாவமோ? படைத்தவன் கோபமோ?
என்னவோ தெரியேன் இக்கதியானேன்;
நெஞ்சினில் இரக்கம் நிறைந்தவர் இல்லையோ?
கெஞ்சினேன் அருள்வீர்; அஞ்சலி” என்றாள்-
மறைந்தும் கந்தையில் பறைந்திடா வாட்டம்;
அறந்தன் வலியினால் அகற்றொணாப் பசிநோய்;
அன்னையென் றேத்தும் ஆதியாம் சக்தி
தன்னையே காட்டும் பெண்மையின் வடிவம்;
கையிலோர் குழந்தை கசடனாம் எவனோ
மையலே காட்டி மயக்கியே பசப்பிப்
பேயாம் காமப் பெருந்தீச் சுட்டதால்
நாய்போல் உடலை நச்சினான் தந்தது-
பாவச் சின்னமாய்ப் பாவையின் இடுப்பில்
கூவி இரைத்துக் குவலயம் பழித்திட
நின்ற தாம் எனினும் நெஞ்சினில் எங்கோ
கன்றிய பசியின் கருக்கலுக் குள்ளே
மின்னிடும் தாய்மையின் வேகத்தால் தாங்கினாள்;
தன்னையும் நோவாள்; “சாமியின் கண்ணும்
நொள்ளையோ?” என்பாள்; நொடியினில் ஆயிரம்,
சள்ளைக் கிளர்ச்சியால் சாம்பலாய் உதிர்வாள்;

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/21&oldid=1110396" இலிருந்து மீள்விக்கப்பட்டது