பக்கம்:மின்னல் பூ.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதில்


‘பாட்டெழுதி அனுப்பி வைத்தால்
பாடிக் கொண்டேயிருப்பேன்;
பாட்டிசையாய் உம் வடிவைப்
பார்த்துப்பார்த் தேமகிழ்வேன்’
என்றெழுதிப் பொற்கடிதம்
இங்கிதமாய் விடுத்துள்ளாய்-
இன்றெனக்குப் பாட்டெல்லாம்
என்னவென்றே அறியாயோ?
பாட்டெல்லாம் உன் பாட்டு;
பகலிரவும் உன்பாட்டு;
வீட்டினிலும் வீதியிலும்
வேறெங்குச் சென்றாலும்
உன்னையிங்கு பிரிந்துயிர்க்கும்
உள்ளத்தில் ஓங்குகனல்
தன்னில் முங்கிக் குளித்தெழுந்த
தழல் மணக்கும் துயர்ப்பாட்டு;
அன்றுன்னை அணைத்தகரம்
அழுதேங்கும் துயர்ப்பாட்டு;
குன் றருவிக் கண்ணிழந்த
கொள்ளையின்பத் துயர்ப்பாட்டு.
உள்ளமெனும் சுடுகாட்டில்
உருக்குலைந்த காதல்தனைக்

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/38&oldid=1116714" இலிருந்து மீள்விக்கப்பட்டது