பக்கம்:மின்னல் பூ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமான்


வாய்தெறிக்கத் தூங்கிடுவார்
மனத்தெறிக்க இரவெல்லாம்
தணிக்கிடந்து நான் உழலத்
தம்முறக்கக் கொடுமையிலும்
தளராமல் அரைக்கண்ணைத்
தான்திறந்து பார்த்திருப்பார்
கனக்கொடிய ஐயமெனும்
கருதஞ்சம் என்றனக்கு
காலமுடி வூழித்தீக்
காட்டுவதற் கென் செய்வேன்?

கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு இளம் பெண்ணின் துயரத்தை இக்கவிதை கூறுகிறது.

பிணிப்புண்ட மான் குட்டிப் பேதையளம் -அந்த மங்கை பின் உள்ளம் துள்ளிக் குதிக்கும் மான் குட்டி போன்றது; ஆனால், பிணிப் பூண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உள்ளமாகிய மான் குட்டியின் காலை ஒடித்து விட்டாள்.

கீழ குறட்டை -கணவன் கிழவன் என்பதைச் சொல்லாமற் சொல்லுகிறாள்.

பெண்மை நிறைக்கடல் -நிறை என்பது பெண்மையின் தனிப் பெருமையல்லவா? அந்தக் கடலிலே உள்ளக் கிளர்ச்சியென்னும் அனலை அவித்திருக்கிறாள்,

காலமுடி வூழித்தீ-கால முடிவில் உண்டாவதாகக் கூறப்படும் ஊழித்தீயைப் போலக் கணவின் அவளிடத்தே கொண்டுள்ள ஐயம் அவளைச் சுடுகின்றதாம்.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/67&oldid=1117633" இலிருந்து மீள்விக்கப்பட்டது