பக்கம்:மின்னல் பூ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குதிரை வீரன்


மன்றல் முடிந்தென்றன்
மலர்க்கூந்தல் உம்கரத்தால்
அன்புடனே தீண்டு முன்பு
அமர்மூளப் பரியேறி
என்னைப் பிரிந்தெங்கோ
ஏகினீர்: அந்நாளில்
சென்ற படை யிதுவேளை
திரும்பிடக்கண் டோடிவந்தேன்
அந்தோநீர் மாண்டீரோ?
அன்றேறி நீர் சென்ற
கந்துகத்தில் வேறொருவர்
கண்ணெதிரே வந்தாரே.


இது சீன நாட்டுக் கவிதை ஒன்றின் தழுவல். சீனமக்கள் வீரம் மிகுந்தவரெனினும் நம் நாட்டினரைப் போலவே. அமைதியை விரும்புகின்றவர்கள்; போரை வெறுப்பவர்கள். புகழ்பெற்ற சீனக் கவிஞர்கள் பலர் போரைக் கண்டித்துப் பல கவிதைகள் இயற்றியுள்ளார்கள்.

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/70&oldid=1117654" இலிருந்து மீள்விக்கப்பட்டது