பக்கம்:மின்னல் பூ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கதை படிப்பதுபோலக் கவிதையைப் படிக்கக்கூடாது. அப்படிப் படித்தால் கவிதையைப் பூரணமாகச் சுவைக்க முடியாது. அமைதியாக இருந்து கவனமாகக் கவிதையைப் படிக்கவேண்டும். அது மட்டும் போதாது. கற்பனைத் திறனையும்கூடச் சேர்த்துக்கொண்டு படிக்கவேண்டும். கவிதை அதற்கு உதவியாக நிற்கும் என்பது மெய் தான். ஆனால், உள்ளத்தை எங்கோ மேய விட்டுவிட்டுக் கவிதையைக் கண்ணால் பார்ப்பது சரியல்ல. இன்னும் ஒன்று, ஒரு தடவை இரண்டு தடவை படித்தும் கவிதையை முற்றிலும் சுவைத்துவிட முடியாது.

பல தடவை படிக்கவேண்டும்; ஒவ்வொரு சொல்லும், சந்தமும், அசைவும், நெளிவும், குறிப்பும், மறைப்பும் என்னென்ன உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புகிறது என்று கண்டு அனுபவிக்க அதுதான் வழி. ஆனால், அப்படிக் கூறுகின்ற போதுதான் நமது அவசர வாழ்க்கையாகிய நந்தி வழி மறைக்கிறது. கவிதா தேவியைத் தரிசித்து அவளது இன்ப நோக்கை முழுமையாகப் பெற இடைஞ்சலாக மலைபோல் நிற்கிறது.

கவிஞன் இந்த நிலையிலே என்ன செய்ய முடியும்? கவிதைக்கு விளக்கம் எழுதி அதைப் படிப்பதை எளிதாக்கலாமா? கவிதையை அவன் உரைநடையில் முற்றிலும் விளக்கிவிட முடியுமானால் அவன் கவிதை எழுத வேண்டிய

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/8&oldid=1123550" இலிருந்து மீள்விக்கப்பட்டது