பக்கம்:மின்னல் பூ.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெற்ற மனம்


1

ஏழை மகன் ஒருவன் — அவன் — எடுப்பு வாய்ந்த உருவன்
காதல் செய்தானே — அவளோ — கயமை செய்தாளே

2

ஆணை போட்டாள் ஒன்று — நீயும் — அறுத்து வாடா என்று
நாய் புசிக்கவே — உனது — தாய் தன் இதயமே

3

தாயின் வீடு சென்றான் — பெரும் — மோக மீறி நின்றான்
இதயங் கீண்டானே — கையில் — எடுத்துப் பாய்ந்தானே

4

வேக மீறி யோட — அவனும் — விழுந்தான் புழுதிசாட
தரையில் இதயமே — மோதி — சருகாய் உருண்டதே

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/80&oldid=1121407" இலிருந்து மீள்விக்கப்பட்டது