பக்கம்:மின்னல் பூ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது வழி

புலியும் அவன் ஜாதியாகி விட்டன.
மலையும், காடும், ஆறும், கடலும் அவன் கூட்டமாயின.
மனிதன் மட்டும் அவனை ஏறெடுத்துப்
பார்க்கவில்லை.
அவன் பாட்டைத் தேடவில்லை.

துவன் உடல் காய்ந்து சருகாகிவிட்டது.
புகழ்ச்சித் தண்ணிழல் இல்லை.
அன்பு நோக்கில்லை.
அது தீய்ந்துவிட்டது.
மூச்சு ஒடுங்கிவிட்டது.
அவனுடைய இதயக் கனல் காக்கை குருவிகளோடு
பாய்ந்து வானில் கலந்துவிட்டது.
கடலின் அலையாகிவிட்டது.
மலையின் நீலத்தில் மணியாகிவிட்டடது.
மக்கள் ஓடி வந்தார்கள்.
அவன் உடலுக்கு மாலை சூட்டினார்கள்.
கந்தலைக் களைந்து பட்டாடை போர்த்தார்கள்.
அதன் முன்னால் விழுந்து வணங்கினார்கள்.
அதற்குப் பூஜை செய்வதென்று முடிவு செய்தார்கள்.
அவன்மறைந்துவிடவில்லை, எங்களோடு இன்னும்

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/86&oldid=1121419" இலிருந்து மீள்விக்கப்பட்டது