பக்கம்:மின்னல் பூ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இசைவாய்


அயிலைப் பழித்த விழியா யுனக்கு நான்—இன்று
அறிவிப்ப தொன்று பதில் அன்பு பேசுவாய்
குயிலைப் பழித்த மொழி கொஞ்சுங் கொடியே—உன்றன்
குரலில் கசந்திடுமோர் சொல்லும் வருமோ?

மதனன் மயங்கிடுமுன் மார்பிரண்டினில்—என்றன்
மனது கிடப்பதை நீ கண்டதில்லையோ?
வதன மதி நிகர்த்த மங்கை யமுதே—மறு
மாற்றம் நீ சொல்வதிலென் வாழ்க்கையுள்ளதே

அமரமெல் லிசைதரும் மோனமதிலே — பொங்கும்
அமுதமாம் இன்பஎழிற் சிற்ப மங்கையே
தமனிடர் மேனியனே சந்தச் சுவையே — உளம்
தடையின்றி அவ்விடமே தங்க இசைவாய்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/92&oldid=1121429" இலிருந்து மீள்விக்கப்பட்டது