பக்கம்:மின்னல் பூ.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மணியோசை


கோயிலிலே மணியோசைக்
கோமாளம் ஆடிவிட்டு

வாயிலெலாம் வன்கருமை
மனமெல்லாம் பேயிருட்டாய்

வாழ்வினிலே மடமைவழி
செல்லுகின்ற மாண்புடையீர்

கீழ்மையிலே நிலைநின்றும்
கேலியறக் கூத்தெதற்கோ ?

மணியோசை வேண்டாவாம்
மனக்கோயில் அன்பெனுமோர்

இணையேது மில்லாநல்
லெழில்நந்தா விளக்கிட்டால்

பொன்னாட்டு மணியோசை
பொங்கியெழுந் தெண்டிசையும்

என்னாட்டும் கணகணத்தே
இன்னமுதம் பொழிந்திடுமே.


கோமாளம்-கோமாளியின் பரிகாசச் செயல், வாயில் என்பது இங்கு ஐம்பொறிகள். வன் கருமை-வலிய கருஞ் செயல்களாகிய கொடுமைகள். கணகணத்து- கணகண

வென்று ஒலி செய்து.

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/96&oldid=1121434" இலிருந்து மீள்விக்கப்பட்டது