பக்கம்:மின்னொளி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

டியது. தானாகவரும் பெருமையை வேண்டா மென்கிறீர்களே. ஒப்புக்கொள்ளுங்களப்பா,

(செல்லத்துறை வியப்போடு பார்க்கிறான் மின்னொளியை)

பொன் :- சரியம்மா. ஒனக்காக ஒப்புக்கிறேன்.

மின்னொளி :- இந்த நல்ல அறிவுத்தொண்டு செய்ய முன் வந்திருக்கிறாரே உபாத்தியாயர், இவருக் காக ஒப்புக்கொள்ளுங்கள்.


செல்ல :- மகிழ்ச்சி. நாளையே ஆரம்பக் கூட்டம் அவசியம் வாருங்கள். (மின்னொளியைக் காட்டி இவர்கள்....?)

பொன் :- என் மகள்.

செல்ல : படித்தவர்கள் போலிருக்கிறது. நல்ல மனம் இவர்களையும் அழைத்து வாருங்கள்.

பொன் :- ஆகட்டும்.

(செல்லத்துரை போகிறார்)

இரண்டாம் காட்சி.

(இருளன் பூசாரி வீடு. வேறு இடமின்மையால் அங்கு தங்கியிருக்கிறார் செல்லத்துரை, கட்டில்மேல் உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறர். கோயில் பூசை முடித்து இருளன் வருகிறன்

இருளன் :- வாத்தியாரே! இன்னும் சாப்பிடலையா?

செல்ல :- இனிமேல்தான். சடை ச் சி தண்ணீர் கொண்டுவரப் போயிருக்கிறது.அதோ வந்தா யிற்று. வாருங்களேன். சாப்பிடலாம்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/10&oldid=1412415" இலிருந்து மீள்விக்கப்பட்டது