பக்கம்:மின்னொளி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

இருளன் :- பரவாயில்லே, இப்பத்தான் கோயில்லேருந்து வந்தேன் கொஞ்ச நேரம் போவுட்டும். சடைச்சி! வாத்தியாருக்கு வேணுங்கிறதைக் குடு, செய்யி. நல்லவரும் மா! நம்ப ஊட்லியே இருக்கச் சொல்லிட்டேன்.

சடை :- சோறுகூட நானே ஆக்கிபுட்றேன்னு சொன்னேம்பா, வேணாங்கறாரு.

இருளன் :- ஒனக்கு எங்கெம்மா தெரியும்? நாக்கு ருசியா பண்ண சுத்தம் சுகாதாரமா சாப்பிட் றவறாச்சே.

சடை :- அதெல்லாம் எனக்குக்கூட தெரியும்பா,சொன்னாரு.

இருளன் :- இப்ப, அதுக்குள்ளே சீஷப் புள்ளே ஆயிட்டேன்னு சொல்லு!

செல்ல :- புத்திசாலிப் பெண். படித்தால் நல்ல முன்னேற்றமடையலாம். தங்கமான குணம். சடைச்சியை என் தங்கையைவிட அதிகமாக விரும்புகிறேன். சடைச்சிக்குப்_படிக்கவும், பாடவும் கற்றுக்கொடுக்கப் போகிறேன்.

இருளன் :- பொம்பளை புள்ளைக்கு சோறாக்கத் தெரி ஞ்சா போதுந் தம்பி, அதெல்லாம் என்னுத் துக்கு?

(இடுப்பில் குடத்தோடு, முகம் திருப்பி சமையலறைக் குப் போகிறாள் சடைச்சி, வயிரமுத்து வருகிறான்.)

வயிர :- (அலட்சியமாக) என்ன பூசாரி, எப்படி இருக்கிறே?

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/11&oldid=1412420" இலிருந்து மீள்விக்கப்பட்டது